Wednesday, May 27, 2009

Good Night Good Night

நடுநிசி 12.30 மணி. கைப்பேசி கூப்பிடுகிறது

அவள்: என்னடா தூங்கிட்டியா?

அவன்:இல்ல சொல்லு.

அவள்:இன்னுமா தூங்கலை? இவ்வளவு நேரம் தூங்காம என்ன பண்றே?

அவன்:உன் கூட பேசிட்டு இருக்கேன்.

அவள்:ஐயோ. அது இப்ப. அதுக்கு முன்னாடி ஏன் தூங்கலே

அவன்: எல்லாம் நீ கூப்பிடுவே அப்படின்னு வெயிட் பண்ணேன்.

அவள்:Hmm சரி எனக்கு தூக்கம் வருது

அவன்:அப்ப தூங்க வேண்டியது தானே.இதை சொல்றதுக்கா போன் பண்ணே?

அவள்: நீ குட் நைட் சொல்லு.அப்புறமா நான் தூங்கறேன்.

அவன்:சொல்லலைனா தூங்க மாட்டியா?

அவள்:நீ சொல்லு நான் தூங்கறேன்

அவன்:சொல்லலைனா

அவள்:சொல்லு

இப்படியே மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்க, நடுவில் கைப்பேசி கதறுகிறது

கைப்பேசி:அவன் குட் பை சொல்லாட்டியும் நான் சொல்றேன். அவ தூங்காட்டியும் நான் தூங்க போறேன். சார்ஜ் இல்ல. இப்படி பேசறதுக்கு முதல்ல பேட்டரியை சார்ஜ் பண்ணுடா!

Tuesday, May 26, 2009

அவளும் அவனும்

அண்ணல் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவன் அவளின்
தோழியை நோக்கியதை!

Monday, May 25, 2009

அன்றும் இன்றும்?

உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லயே என்றால் ஒரு சாபமிடு

மாக்கோலம் போடுவதற்கு வரவில்லையே
அவள்கோலம் பார்ப்பதற்கு வழிஇல்லையே

இந்த பாடல் வரிகளை எல்லாம் இந்த காலத்திற்கு எப்படி மாற்றி எழுத?

Tuesday, May 19, 2009

கண் பேசும் வார்த்தைகள்

அதே பேருந்து நிறுத்தம்.
அதே நேரம்.
அவளும் அவனும் தவறாமல்.
தொலைக் காட்சித் தொடர் போல எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஜவ்வாக ஒரு வாரமாக நோக்கிக் கொண்டே இருந்தார்கள்.
ஆனது ஆகட்டும்,வருவது வரட்டும்.நோக்கியது போதும் நோக்கியாவுக்கு முன்னேறுவோம் என்று முடிவு கட்டி காளையை நெருங்கினாள்.
எப்படி சொல்றது எங்க ஆரம்பிக்கறது என்று எல்லாம் சுற்றி வளைக்காமல்
தயக்கமில்லாமல் நெஞ்சை நிமிர்த்தி மிகத் தைரியமாக கண்களை நேராக பார்த்துப் பேசினான்.
"உங்க கூட அழகா ஒரு பிகர் இருக்குமே உங்க friend. அவங்க நம்பர் கிடைக்குமா?இது தான் என் நம்பர் அவங்க கிட்ட கொடுத்துடுங்க"

Saturday, May 16, 2009

என்ன கொடுமை சார் இது

கொடிது கொடிது இளமையில் தனிமை
அதனினும் கொடிது Boy-Friend/GirlFriend இருப்போர்க்கு நண்பராய் இருத்தல்

வயிற்றுப் பிரச்னை

கோட்சூட் போட்ட மேனஜர்கள் இரண்டு பேர்
சட்டைபேண்ட் போட்ட சூபர்வைசர்கள் மூன்று பேர்
அவர்களுக்கு கீழே வேலை பார்க்க நான்கு பேர்
குறைந்துக் கொண்டே போகும் சேவையின் தரம்
அதிகரித்துக் கொண்டே போகும் வாடிக்கையாளர் புகார்கள்
சாப்ட்வேர் கம்பெனி அல்ல
சாப்பிடும் சரவணபவன் தான்!

இது ஓரு நல்ல கேள்வி!

டூப் போடும் ஸ்டண்ட் மேனாக கமல் நடித்த பம்மல் கே சம்பந்தம் படத்தின் சண்டைக் காட்சிகளில் அவருக்கு யார் டூப் போட்டிருப்பார்கள்?

Tuesday, May 05, 2009

நானே நான்

சேர்ந்தேன்,பிரிந்தேன்!
ஏன்,எதற்கு?
அறியாமல்,புரியாமல்
நிலையாமையின் உருவமாய்
நான் கணிப்பொறியாளன்!