Thursday, July 23, 2009

ஒரு பையன், ஒரு பொண்ணு

காலம் கெட்டுப் போயிருக்கிறது.நம் பிள்ளைகளை நாம் ஒழுங்காக வளர்த்தாலும் சமூகம் ஒழுங்காக இருக்க விடுவதில்லை. என்ன தான் நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், சுதந்திரம் கொடுத்தாலும் அவர்கள் நம்மை மதிப்பதில்லை. நாம் அவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். என்று எல்லாம் வந்த நண்பர் பொரிந்து தள்ளினார்.

அவரைப் பார்த்து வெகு நாளாயிருந்தது. பெண்ணைப் பெற்றவர். நானும் பெண்ணைப் பெற்றவனாதலால் அவரின் ஆற்றாமை புரிந்தது.

என்ன சார், இவ்வளவு கோவப்படற அளவுக்கு என்னாச்சு, எதுவாயிருந்தாலும் சரி செய்து விடலாம் என்ன பிரச்னை சொல்லுங்க என்று உண்மையான அக்கறையுடன் கேட்டேன்.

அவர் முகம் மேலும் சிவந்து, எனக்கு பிரச்னை எல்லாம் எதுவும் இல்லை. என் பெண் எல்லாம் அப்படி அல்ல என்றார்.

நேற்று பெங்களூர் போயிருந்தேன். அங்கு தியேட்டரில் உங்கள் பெண்ணைப் பார்த்தேன், ஒரு பையனோடு. அதுவும் கையைக் கோர்த்துக் கொண்டு, தொட்டுப் பேசிக் கொண்டு.

பார்த்தவுடன் உனக்கு போனில் சொல்ல வேண்டும் என நினைத்தேன், நேரில் சொன்னால் தான் சரி வரும் என்று தான் வந்தேன். இன்னும் என் வீட்டுக்கு கூட போகவில்லை என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

அந்த பையன் சற்று ஒல்லியாக, கொஞ்சம் உயரமாக, கலர் கம்மியாக இருந்திருப்பானே அது வந்து என நான் ஆரம்பிக்க,

ஆமாம்.உனக்கு எல்லாம் தெரியுமா என அவர் ஆரம்பிக்க,

அதற்கிடையில் என் மனைவி, எல்லாம் அந்த பையன் கொடுக்கிற சுதந்திரம்.காலம் மாறிட்டா பண்பாடு, பழக்கவழக்கம் எல்லாம் எதுவும் இல்லியா என புலம்ப ஆரம்பிக்க,

அவர் முகத்தில் குழப்பம் கும்மியடித்தது.

மனைவியை அமைதிப்படுத்தி விட்டு, சொன்னேன். மன்னிக்கனும். அவ கல்யாணத்திற்கு உங்களை .....

No comments: