Friday, November 13, 2009

The Ugly Truth

This Movie is R-Rated. So is this review post!

வேலையில் கண்ணும் கருத்துமாய் தொழிலைத் தெய்வமாய் மதிக்கும் பெண், ஆனால் ஒண்டிக்கட்டை. ஆண்கள் மீது ஆசைதான், ஆனாலும் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என மாத மளிகைக் கடைப் பட்டியலை விட நீளம், எவன் சிக்குவான்? அப்படியே சிக்கினாலும் அவனிடம் சிறுபிள்ளைத்தனமாய் நடந்துக் கொண்டால்.

இப்படி இருக்கையில், அவள் அலுவலகத்திற்கு அவளிடம் ஒருவன் வேலைக்கு சேர்கிறான். அவனை அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. அவனும் அவன் பேச்சும் நடவடிக்கைகளும் எரிச்சலூட்டுகின்றன. வேலையில் ஒரே வெட்டுக்குத்து.

இந்த நேரத்தில் அவள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அழகான தேவன்.[தேவதைகள் மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன].

இதையெல்லாம் தெரிந்த நம் கதாநாயகன், கதாநாயகியின் காதலுக்கு உதவி செய்தால் வேலையில் வெட்டுக்குத்து இருக்க கூடாது என ஓப்பந்தம் போடுகிறான்[குழப்பமாய் இருக்கிறது என சொன்னாலும் சரி புரிந்து விட்டது என சொன்னாலும் இத்தோடு இதை படிப்பதை நிறுத்தி விடலாம்.]

கதாநாயகன் திட்டப்படி நடக்க கதாநாயகிக்கு பக்கத்து வீடு உஷாராகிறது. இந்த நேரத்தில் கதாநாயகனோடு கதாநாயகி வெளியூர் போக, போன இடத்தில், கற்பனையைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காதல் வருகிறது. நம் பக்கத்து வீடும் வந்து சேருகிறது.

பக்கத்து வீ ட்டை, பக்கம் வராதே என கதாநாயகி விரட்டிவிட, அது தெரியாமல் கதாநாயகன் வேலையை விட்டு விலகி விட, பின்னர் கடைசியில் இருவரும் இணைகிறார்கள்.[கதாநாயகியும் கதாநாயகனும் தான்]

என்னடா இவன் தமிழ் படக் கதையை தன் சொந்தக் கதை என்று கரடி விட போகிறானா என்று கடுப்படைய வேண்டாம்.

The Ugly Truth என சமீபத்தில் வந்த ஆங்கிலப் படத்தின் கதை இது தான்.இனி திரைக்கதை.

கதாநாயகி தொலைக்காட்சியில் வணக்கம் சென்னைப் போன்ற ஒரு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். எதையும் பிளான் பண்ணித்தான் செய்வார். ஆண்களைக் கணக்கு பண்ணுவதிலும், ஆனாலும் பிளான் பணாலாகி விடும்.

அப்படி இருக்க நிகழ்ச்சி பரபரப்பாக அதிரி புதிரியாக இருக்க வேண்டுமென நாராயண ரெட்டி ரேஞ்சுக்கு ஒருவனை கதாநாயகியின் மேலாளர் கொண்டு வருகிறார்.நிகழ்ச்சியின் டிர்பி ரேட்டிங் எகிறுகிறது. அவனால் இவள் வேலைத் தப்புகிறது.இவள் காதலுக்கும் கைக் கொடுக்கிறான். காதலனோடு வெளியூர் போகவிருக்கையில், இவர்களை விட ஒரு பெரிய தொலைக்காட்சி அவனைப் பேட்டிக்கு அழைத்து , அதன் மூலம் அவனைக் கொத்திக் கொண்டு போக இருப்பதாக செய்தி வர, நீ தான் அவன் கூட இருந்து பேசி அவனை தடுக்க வேண்டும். இல்லையெனில் நம் கதி அதோகதி என நிகழ்ச்சிக்கு கதாநாயகியை துணைக்கு அனுப்பி வைக்கிறார், மேலாளர்.

போன இடத்தில் கதாநாயகிக்கு பெரிய வேலையில்லாமல் பெரிய தொலைக்காட்சியின் அழைப்பை சொந்த காரணங்களுக்காக நம் ஆள் நிராகரித்து விட, சந்தோஷத்தில் கதாநாயகி இருக்கையில் இருவருக்கும் காதல்

தீ பற்றுகிறது. அணைத்து அணைக்க முயற்சி செய்து பிரிகின்றனர். சென்ற பின் கதாநாயகியின் கதவு தட்டப்படுகிறது, திறந்தால் காதலன், சிறுது நேரம் கழித்து மீண்டும் கதவுத் தட்டப்பட கதாநாயகன். எல்லாரும் அப்படியே ஷாக்கிறார்கள், நம்மைத்தவிர. கதாநாயகன் கிளம்பிச் செல்ல, கதாநாயகி காதலனிடம் உண்மையைச் சொல்லி பிரிகிறாள்.

ஆனால் அடுத்த நாள் வேலைக்கு போனால் நம் ஆள் இராஜினாமா செய்திருப்பான். பின்பு அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை ஜவ்வில்லாமல் மிக அழகாக எடுத்திருப்பதாக எனக்குப் பட்டது.

படத்தில் கதாநாயகனைச் சந்திக்க வரும் சிறுவன் யாரென கதாநாயகி ஒரு நொடி தயங்குவதும் நான் அவன் மாமன் என விளக்குவதும் அவன் பொருட்டு தான் நான் பெரிய தொலைக்காட்சியில் வெளியூரில் வேலை செய்ய விருப்பமில்லை எனச் சொல்வது, கிளைமாகஸ் என சில நெகிழ்வான காட்சிகள் சில உண்டு.

புதிரா புனிதமா அளவுக்கு நிகழ்ச்சி நடத்தும் கதாநாயகனுக்கு கதாநாயகி, போன் செய்து பேசும் காட்சி, கதாநாயகி காதலனை முதலில்[முழுதாகப்] பார்ப்பது, கதாநாயகி காதலனோடு மேட்ச் பார்க்கப் போவது, கதாநாயகி பார்ட்டிக்கு போவது, என ஒரு சில ஆங்கில தரத்தில் இருக்கும் சில காட்சிகளை தமிழ் கலாச்சாரத்திற்கு மாற்றி சூர்யாவோ மாதவனோ தமன்னாவோ வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்

பி.கு
அது என்ன ugly truth என கேட்பவர்களுக்கு அது தான் நம் கதாநாயகன் நடத்தும் நிகழ்ச்சியின் பெயர்.

3 comments:

RamNarayanS said...

Rrrrrromba periya review post. :-)

Unknown said...

Though im not good in reading tamil.. i did manage to read slowly.. cool write up

Appu said...

Keep reading my blog as well read other tamil posts in my blog. You will become good in reading tamil, i promise :)