Sunday, March 14, 2010

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

பாப்பம்பட்டி  கிராமத்தில் இருப்பவர்களுக்கு உசிலம்பட்டி  கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட பொருளின் ஆசை. ஆனால் பாப்பம்பட்டி கிராமத்து மக்கள் அதை யாருக்கும் தருவதாக இல்லை. உசிலம்பட்டி மக்கள், பாப்பம்பட்டியில் வேவு பாக்க குழுவாக செல்லும் போது ,ஒருவன் அங்கே மாட்டிக்கொள்கிறான். அவனை கொல்ல முற்படுகிறாள் ஒருத்தி. [அந்த ஒருவன் தான் கதாநாயகன். அந்த ஒருத்தி தான் கதாநாயகி]அப்பொழுது பாப்பம்பட்டி குல தெய்வம் அவள் மனதில் தோன்றி அதை தடுத்து விடுகிறது. தெய்வ சங்கல்பம் என்பதால் அவனை அவர்கள் தலைவனிடம்[ஊர் தலைவர் தான் அந்த பெண்ணின் தந்தையும் ஆவார்] அழைத்து செல்கிறாள். ஊர் பஞ்சயாத்து அவளை திட்டுகிறது. அவர்கள் ஊர் பூசாரி அவர் ஆசிர்வதிக்க பட்டவர் என்று குறி சொல்கிறார்.

உசிலம்பட்டிகாரனை பாப்பம்பட்டியின் பழக்க வழக்கங்கள் எல்லாம் சொல்லி தரும் பொறுப்பை [வேறு யாரிடம்] தான் பெண்ணிடம் கொடுக்கிறார் தலைவர்.
அப்படி அவன் கற்றுக் கொண்டு அந்த ஊர் காளையை அடக்கும் போது அந்த பெண்ணிற்கு வழக்கம் போல காதல் வருகிறது.
உசிலம்பட்டிகாரனுக்கும் உசிலம்பட்டு மக்கள் ஆசைபடுவது தப்பு. பாப்பம்பட்டு மக்கள் தான் நல்லவர்கள் என்று உணர்கிறான்.

இந்த சமயத்தில் இவன் வேவு பாக்க வந்தவன் என்ற உண்மை வெளிபடுகிறது.

சமாதானம் செய்ய முயன்று பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து உசிலம்பட்டிக்கும் பாப்பம்பட்டிக்கும் பயங்கர சண்டை வருகிறது.  உசிலம்பட்டிகாரன் பாப்பம்பட்டி மக்களுடன் சேர்ந்து சண்டை இடுகிறான். [வழக்கம் போல அவன் நண்பர்களும் அவனோடு]

இதில் பாப்பம்பட்டி தலைவர் கதாநாயகனின்  நண்பர்கள் அனைவரும் செத்து மடிகிறார்கள். பாப்பம்பட்டி உசிலம்பட்டியிடம் தோற்று விடும் போல் இருக்கும் சமயத்தில் பாப்பம்பட்டி குல தெய்வத்திடம் கதாநாயகன் வேண்டுகிறான் . கடைசியில் தெய்வம் உதவ , கதாநாயகனும் வில்லனும் சண்டை போட,வில்லனை கொன்றும் கதாநாயகன் உயிருக்கு போராட கதாநாயகி காப்பாற்றுகிறாள்.

பி.கு
இது அவதார் படத்தின் கதை என்றோ. பாப்பம்பட்டி தான் நாவி என்றோ. உசிலம்பட்டி தான் பூமி என்றோ உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பி.பி.கு
இந்த படத்திற்கு ஆஸ்கார் கிடைக்க வில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு, "போங்கப்பு புள்ளைங்களை படிக்க வைங்க"

4 comments:

RamNarayanS said...

கோடி கோடியா பணத்தை கொட்டி படம் எடுத்தா, ராமராஜன்/நாட்டாமை rangeக்கு படக்கதையா அதை transform பண்ணி படம் காமிக்கிற zenoவுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

Aside, Oscars have always preferred the underdogs. Not blockbusters. Look at this. http://beta.thehindu.com/arts/magazine/article195824.ece

Appu said...

விஜய் படம் கூட தான் கோடில எடுக்கிறாங்க!!!கோடியை எங்க கொட்டி இருக்காங்க? நம்ம கதையை அவர் சுட்டுட்டார்னு தோனுச்சு.இப்படி எழுதனும்னு கொஞ்சம் கூட மெனக்கெடலை. இந்த Replyகு யோசிச்ச அளவுக்கு கூட இதை எழுத யோசிக்கலை. எழுத்தே என்னை இட்டுச் சென்றது. :)
என்ன சொன்னாலும் "இதுல Building strong, basement weak"

RamNarayanS said...

Somebody (from the film industry and I don't recollect) told a long time back, There are only 5 or 6 different basic stories. All that can be told has been told. All that we see are variants of those basic story lines, told and retold in different narratives and points of view. We have seen this story anyway. Good vs bad, white vs. colored, spy vs. spied, political range. The technology is what is different.

Appu said...

Yep agreed. so true. i too read that. if you take titanic, the ship is just a place where the love story happens. the human touch, feelings, bond and emotion between characters can still hold good even without the magnificence! even in all spielberg movies, technology is just a tool, and the story is the king and hence he is successful.the story should touch the cord in you