Saturday, March 24, 2018

இந்த நாடும் நாட்டு மக்களும்...

கதை 1:
ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டு முன்னாடி பிச்சை கேட்டானாம்.
மருமக,  சாப்பாடு எல்லாம் இல்ல, போயிட்டு வா அப்படின்னாளாம். கேட்டுகிட்டிருந்த மாமியார்,  மறுபடி பிச்சக்காரன கூப்பிட்டு, என்ன சொன்னா அப்படின்னு கேட்டாளாம். சாப்பாடு இல்ல அப்படின்னு சொல்றாங்க அம்மா அப்படின்னானாம்.

மாமியாருக்கு வந்ததே கோவம். அவ யார் சொல்றதுக்கு,  நான் சொல்றேன் சாப்பாடு இல்ல போ அப்படின்னாளாம்.

கதை 2:
ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க, மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம் அப்படின்னு

கதை 3:
தமிழ் சினிமால பாத்த ஞாபகம்.  வில்லனோட வேலைக்காரனை யாரோ அடி பின்னிடுவாங்க.  கேள்விப்பட்ட வில்லன், என் வேலைக்காரனை நீ எப்படி அடிக்கலாம் அடிச்சா நான் தான் அடிப்பேன் அப்படின்னு சொல்லி செம்மமையா அடிப்பார்

சமீபத்திய நிகழ்வு 1:

தம்பி மார்க். இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை எல்லாம் நீங்கள் சொந்தம் கொண்டாட கூடாது. கன்னாபின்னாவென்று திருட கூடாது, அப்புறம் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். : மத்திய அமைச்சர் கடுமையான எச்சரிக்கை

சமீபத்திய நிகழ்வு 2:
இந்தியர்கள் பணம் இல்லாத ஏழையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் டேட்டா பணக்காரர்கள். அவர்களின் டேட்டாவை எல்லாம் விற்று இந்திய ஏழைகள் அவர்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்- நந்தன்

சமீபத்திய நிகழ்வு 3:
பிரதமரின் செயலி, பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றி மற்ற நிறுவனங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது

சமீபத்திய நிகழ்வு 4:
இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை எல்லாம் வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் - மத்திய அமைச்சகம்!

சமீபத்திய நிகழ்வு 5
ஆதார் வழியாக யார் வேண்டுமானாலும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அறிந்துக் கொள்ளலாம் - அமெரிக்க பத்திரிக்கை செய்தி

பின்குறிப்பு:

இந்த நிகழ்வுகளுக்கும் மேலே சொன்ன கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை விற்பது, துஷ்பிரயோகம் செய்வதற்கு எல்லாம் இந்தியர்களான எங்களுக்கு தான் ஏகபோக உரிமை. மற்றவர்களுக்கு எல்லாம் இல்லை என்று வாசகர்கள் புரிந்துக் கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல பொறுப்பல்ல

No comments: